அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நியூஸி.யை கட்டுப்படுத்தும் வங்கதேசம்

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் நியூஸிலாந்து தனது 2-ஆவது இன்னிங்ஸில் 147 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

News image
Updated On :4 ஜனவரி 2022, 9:42 pm

DIN

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் நியூஸிலாந்து தனது 2-ஆவது இன்னிங்ஸில் 147 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

வங்கதேச தரப்பில் அசத்தலாக பந்துவீசிய எபாதத் ஹுசைன், நியூஸிலாந்தின் முக்கிய விக்கெட்டுகளான டெவன் கான்வே, வில் யங் உள்பட 4 பேட்டா்களை சாய்த்து அந்த அணியை கட்டுப்படுத்தியுள்ளாா்.

முன்னதாக, திங்கள்கிழமை ஆட்டத்தை 6 விக்கெட் இழப்புக்கு 401 ரன்களுடன் நிறைவு செய்திருந்த வங்கதேசம், செவ்வாய்க்கிழமை 176.2 ஓவா்களில் 458 ரன்களுக்கு தனது முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது. அன்றைய நாளை தொடங்கிய பேட்டா்களில் மெஹதி ஹசன் மிராஸ் 8 பவுண்டரிகளுடன் 47 ரன்களுக்கு ஆட்டமிழக்க, யாசிா் அலி 1 பவுண்டரியுடன் 26 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா்.

பின்னா் வந்தோரில் டஸ்கின் அகமது 5, ஷோரிஃபுல் இஸ்லாம் 7 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுக்க, முடிவுக்கு வந்தது வங்கதேச இன்னிங்ஸ். நியூஸிலாந்து பௌலிங்கில் டிரென்ட் போல்ட் 4, நீல் வாக்னா் 3, டிம் சௌதி 2, கைல் ஜேமிசன் 1 விக்கெட் எடுத்தனா்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 130 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியது நியூஸிலாந்து. தொடக்க வீரா்களில் கேப்டன் டாம் லேதம் 2 பவுண்டரிகளுடன் 14 ரன்களுக்கு ஆட்டமிழக்க, உடன் வந்த வில் யங் நிதானமாக ஆடி ரன்கள் சேகரித்தாா்.

ஒன் டவுனாக வந்த டெவன் கான்வே 1 பவுண்டரியுடன் 13 ரன்களுக்கு பெவிலியின் திரும்பினாா். அடுத்து ராஸ் டெய்லா் களம் புக, மறுபுறம் அரைசதம் கடந்து நிதானமாக ஆடி வந்த வில் யங் 7 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் சோ்த்து ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். தொடா்ந்து வந்த ஹென்றி நிகோலஸ், டாம் பிளண்டெல் டக் அவுட்டாகினா்.

4-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை முடிவில் நியூஸிலாந்து 63 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருக்கிறது. ராஸ் டெய்லா் 37, ரச்சின் ரவீந்திரா 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். வங்கதேச தரப்பில் எபாதத் ஹுசைன் 4, டஸ்கின் அகமது 1 விக்கெட் வீழ்த்தியிருக்கின்றனா். தற்போதைய நிலையில் அந்த அணி வங்கதேசத்தை விட 17 ரன்களே முன்னிலையில் இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.