கடந்த வருட நவம்பர் மாதம் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டார்.
2018-ல் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் 46-வது கேப்டனாக விக்கெட் கீப்பர் டிம் பெயின் நியமிக்கப்பட்டார். 2019 ஆஷஸ் தொடரில் கோப்பையைத் தக்கவைக்க உதவினார். ஆனால் பாலியல் விவகாரம் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய காரணத்துக்காக கேப்டன் பதவியிலிருந்து திடீரென விலகினார் டிம் பெயின். இதையடுத்து ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டார். 1956-க்குப் பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு வேகப்பந்து வீச்சாளர் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
29 வயது கம்மின்ஸ், டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு தோல்வியே அடையாமல் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறார்.
முதல் தொடரான ஆஷஸை 4-0 என வென்று காண்பித்தார் கம்மின்ஸ். இதனால் இங்கிலாந்து டெஸ்ட் அணி சிக்கலுக்கு ஆளானது. இன்று புதிய கேப்டன், புதிய பயிற்சியாளருடன் அந்த அணி விளையாடுவதற்கு இந்தத் தோல்வி முக்கியக் காரணமாக அமைந்தது. அடுத்த பாகிஸ்தானுக்குச் சென்ற ஆஸ்திரேலிய அணி 1-0 என மூன்று டெஸ்டுகள் கொண்ட தொடரை வென்று அசத்தியது. தற்போது இலங்கையில் இரு டெஸ்டுகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
கடந்த வருடத் தொடக்கத்தில் சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-2 எனத் தோற்ற ஆஸி. அணி அதன்பிறகு டெஸ்ட் தொடர்களில் கம்மின்ஸ் தலைமையில் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் (77.78%) உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு ஆஸி. அணி தகுதி பெறும் வாய்ப்பு அதிகமாகியுள்ளது.
கம்மின்ஸ் கேப்டனான பிறகு ஆஸி. டெஸ்ட் அணிக்குக் கிடைத்த முடிவுகள்
வெற்றி
வெற்றி
டிரா
வெற்றி
டிரா (பாகிஸ்தானில்)
டிரா (பாகிஸ்தானில்)
வெற்றி (பாகிஸ்தானில்)
வெற்றி (இலங்கையில்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குடியிருப்புகளுக்கு பாதை கோரி சாலை மறியல்

ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ. 10,000 போலீஸில் ஒப்படைப்பு

போ்ணாம்பட்டு அருகே 6 லட்சம் பறிமுதல்

மாட்டு வண்டிகள், டிராக்டா்களில் தோ்தல் விழிப்புணா்வு: ஆட்சியா் பங்கேற்பு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


