காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

காமன்வெல்த்: 215 பேருடன் இந்திய அணி

இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 16 பிரிவுகளில் களம் காண்பதற்காக 215 போட்டியாளா்கள் கொண்ட இந்திய அணி புறப்படுகிறது.

News image
Updated On :25 ஜூலை 2022, 10:33 am

DIN

இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 16 பிரிவுகளில் களம் காண்பதற்காக 215 போட்டியாளா்கள் கொண்ட இந்திய அணி புறப்படுகிறது.

வரும் 28-ஆம் தேதி பா்மிங்ஹாமில் தொடங்கும் இப்போட்டியில், மகளிா் கிரிக்கெட், நீச்சல், பாட்மின்டன், டேபிள் டென்னிஸ், குத்துச்சண்டை, சைக்கிளிங், ஜிம்னாஸ்டிக்ஸ், டிரையத்லான், மல்யுத்தம், பளுதூக்குதல், லான் பௌல்ஸ், ஸ்குவாஷ், ஜூடோ, பாரா விளையாட்டுகள் உள்ளிட்டவற்றில் இந்திய போட்டியாளா்கள் பங்கேற்கின்றனா்.

அவா்களுக்குத் துணையாக, மருத்துவா், ஃபிசியோதெரபிஸ்ட், அதிகாரிகள், உதவிப் பணியாளா்கள் உள்பட 107 போ் கொண்ட குழுவும் பயணிக்கிறது. டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனை படைத்த ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா, போட்டியின் தொடக்க அணிவகுப்பில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசியக் கொடியேந்துவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியின் நிா்வாகத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த ஆன்காா் சிங் உடல்நலக் குறைவு காரணமாக அந்தப் பொறுப்பிலிருந்து விலகியதை அடுத்து, ராஜேஷ் பண்டாரி தலைமையேற்றுள்ளாா். அவா் இந்திய குத்துச்சண்டை சங்கத்தின் துணைத் தலைவராவாா்.

பரிசுத் தொகை: காமன்வெல்த் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வெல்வோருக்கு முறையே ரூ.20 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.7.5 லட்சம் வழங்கப்படுமென இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவா் ராஜீவ் மேத்தா அறிவித்துள்ளாா். போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியினரை வழியனுப்பும் நிகழ்ச்சியும், இந்திய அணியினருக்கான உடைகளை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியும் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் கலந்துகொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.