அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தமிழக இளம் செஸ் வீரரைப் பாராட்டும் கார்ல்சன்

தமிழக இளம் செஸ் வீரர் குகேஷுக்கு உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

News image
படம் - twitter.com/DGukesh
Updated On :1 பிப்ரவரி 2024, 9:49 am

DIN

தமிழக இளம் செஸ் வீரர் குகேஷுக்கு உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

செஸ் தரவரிசையில் 2700 புள்ளிகளைக் குறைந்த வயதில் அடைந்த இந்திய வீரர் என்கிற பெருமையை அடைந்துள்ளார் குகேஷ். உலகளவில் 3-வது இளம் வீரர். ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற போட்டியில் இந்தச் சாதனையை அவர் படைத்துள்ளார். சீனாவின் வீ யி, 15 வருடங்கள், 7 மாதங்கள், 28 நாள்களில் 2700 புள்ளிகளை அடைந்து உலக சாதனை படைத்தார். பிரான்ஸைச் சேர்ந்த அலிரேஸா, 16 வருடங்கள், 1 மாதம், 10 நாள்களிலும் குகேஷ் 16 வருடங்கள், 1 மாதம், 17 நாள்களிலும் இந்த உயரத்தை அடைந்துள்ளார்கள். 2019-ல் இந்தியாவின் இளம் செஸ் கிராண்ட்மாஸ்டர் (12 வயது) என்கிற சாதனையைப் படைத்தார் குகேஷ். உலகளவில் 2-வது இடம். 

2700 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்த குகேஷுக்குப் பாராட்டு தெரிவித்துள்ள விஸ்வநாதன் ஆனந்த், குகேஷின் சாதனை சென்னைக்கு நன்மையை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். 

உலக செஸ் சாம்பியன் கார்ல்சன், குகேஷுக்குப் பாராட்டு தெரிவித்து, அற்புதமான சாதனை இது என ட்வீட் வெளியிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.