நாங்கள் கிரிக்கெட் வீரர்களா கார்களா?: பென் ஸ்டோக்ஸ் சாடல்

எரிபொருளை நிரப்பினால் கார்கள் தொடர்ந்து இயங்குவதும் எரிபொருள் தீர்ந்து போனால்...
நாங்கள் கிரிக்கெட் வீரர்களா கார்களா?: பென் ஸ்டோக்ஸ் சாடல்

ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பிரபல இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தனது கடைசி ஒருநாள் ஆட்டத்தை தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று விளையாடினார்.

31 வயது ஸ்டோக்ஸ், 83 டெஸ்டுகள், 105 ஒருநாள், 34 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்பது கடினமாக இருப்பதால் இம்முடிவை எடுத்ததாகவும் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து அவர் விளையாடவுள்ளார்.

இந்நிலையில் ஒரு பேட்டியில் தன்னுடைய முடிவு குறித்து பென் ஸ்டோக்ஸ் தெரிவித்ததாவது:

கிரிக்கெட் வீரர்கள் கார்கள் கிடையாது. எரிபொருளை நிரப்பினால் கார்கள் தொடர்ந்து இயங்குவதும் எரிபொருள் தீர்ந்து போனால் மீண்டும் நிரப்பி மீண்டும் இயங்குவதும் என கிரிக்கெட் வீரர்களை எண்ண முடியாது. நாங்கள் டெஸ்ட் தொடரில் விளையாடிக் கொண்டிருந்தோம். அதேசமயத்தில் எங்கள் அணி ஒருநாள் கிரிக்கெட்டிலும் விளையாடிக் கொண்டிருந்தது. இது  சிறுபிள்ளைத்தனமானது.

மூன்று வகை கிரிக்கெட்டிலும் ஏராளமான ஆட்டங்கள் தற்போது நடைபெறுகின்றன. தரமான பொருளையே நாம் வழங்கவேண்டும். சிறந்த வீரர்கள் எல்லா நேரத்திலும் எல்லா ஆட்டங்களிலும் விளையாட வேண்டும். தற்போது மற்ற அணிகளிலும் சில தொடர்களில் விளையாடுவதில் இருந்து வீரர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. அவர்கள் ஓய்வெடுத்துக்கொள்கிறார்கள்.  வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் விளையாடாததால் தான் 160 டெஸ்டுகளில் விளையாட முடிந்ததா என ஸ்டூவர்ட் பிராடிடம் கேட்டேன். சந்தேகமே இல்லாமல் அதுதான் காரணம் என்றார். இங்கிலாந்து அணிக்காக 140-150 டெஸ்டுகளில் விளையாட விரும்புகிறேன். டி20 கிரிக்கெட்டில் சில ஓவர்கள் மட்டும் வீசினால் போதும். என்னுடைய 35, 36 வயதில் அப்போதும் டெஸ்டுகளில் விளையாடிக் கொண்டிருப்பேன். அப்போது திரும்பிப் பார்க்கும்போது இந்த முடிவை எண்ணி நான் மகிழ்ச்சியடைவதாகவே இருக்கும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com