பென் ஸ்டோக்ஸின் கடைசி ஒருநாள் இன்னிங்ஸ்: விடியோ

ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பிரபல இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்...
பென் ஸ்டோக்ஸின் கடைசி ஒருநாள் இன்னிங்ஸ்: விடியோ


தனது கடைசி ஒருநாள் ஆட்டத்தில் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் பென் ஸ்டோக்ஸ்.

தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20, 3 டெஸ்டுகளில் விளையாடுகிறது. ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பிரபல இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தனது கடைசி ஒருநாள் ஆட்டத்தை நேற்று விளையாடினார்.

இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் ஆட்டத்தில் தெ.ஆ. அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த தெ.ஆ. அணி, 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 333 ரன்கள் எடுத்தது. வான் டர் டுசென் 134 ரன்களும் மார்க்ரம் 77 ரன்களும் எடுத்தார்கள். இங்கிலாந்து அணி, 46.5 ஓவர்களில் 271 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. ஜேசன் ராய் 43, பேர்ஸ்டோ 63, ரூட் 86 ரன்கள் எடுத்தார்கள். நோர்கியா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

தனது கடைசி ஒருநாள் ஆட்டத்தில் 5 ரன்களுடன் மார்க்ரம் பந்துவீச்சில் ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com