ஒருநாள் தரவரிசையில் புதிய நெ.1 வீரர்

ஒருநாள் தரவரிசையில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். 
ஒருநாள் தரவரிசையில் புதிய நெ.1 வீரர்
Published on
Updated on
1 min read

ஐசிசி வெளியிட்டுள்ள பந்துவீச்சாளர்களுக்கான ஒருநாள் தரவரிசையில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 3-வது ஆட்டத்தில் விளையாடாததால் ஐசிசி பந்துவீச்சாளர்களுக்கான ஒருநாள் தரவரிசையில் பும்ரா 2-ம் இடத்துக்கு இறங்கியுள்ளார். இதனால் முதலிடத்தை நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் மீண்டும் கைப்பற்றியுள்ளார். 3-வது இடத்தில் பாகிஸ்தானின் ஷாஹீன் அப்ரிடி உள்ளார். இந்தியாவின் சஹால் 16-வது இடத்தைப் பிடித்துள்ளார். 

பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் விராட் கோலி 4-ம் இடத்துக்கு இறங்கியுள்ளார். ரோஹித் சர்மா, 5-ம் இடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் பாபர் ஆஸம் முதலிடத்தில் உள்ளார். 

ஆல்ரவுண்டருக்கான தரவரிசையில் ஹார்திக் பாண்டியா 8-ம் இடத்தில் உள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com