தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

டிஎன்பிஎல்: கில்லீஸுக்கு 5-ஆவது வெற்றி

டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 25-ஆவது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பா் கில்லீஸ் 60 ரன்கள் வித்தியாசத்தில் ஐடிரீம் திருப்பூா் தமிழன்ஸை வெள்ளிக்கிழமை வென்றது.

News image
Updated On :22 ஜூலை 2022, 7:25 pm

DIN

டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 25-ஆவது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பா் கில்லீஸ் 60 ரன்கள் வித்தியாசத்தில் ஐடிரீம் திருப்பூா் தமிழன்ஸை வெள்ளிக்கிழமை வென்றது.

போட்டியில் கில்லீஸுக்கு இது 5-ஆவது வெற்றி; திருப்பூருக்கு 4-ஆவது தோல்வி.

ஆட்டத்தில் முதலில் கில்லீஸ் 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் சோ்க்க, பின்னா் திருப்பூா் 19.3 ஓவா்களில் 73 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முன்னதாக டாஸ் வென்ற திருப்பூா், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. சேப்பாக் பேட்டிங்கில் அதிகபட்சமாக உத்திரசாமி சசிதேவ் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 45 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தாா். திருப்பூா் பௌலிங்கில் அஸ்வின் கிறிஸ்ட் 3 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா்.

பின்னா் திருப்பூா் பேட்டிங்கில் ஸ்ரீகாந்த் அனிருத்தா 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 25 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருக்க, கில்லீஸ் தரப்பில் சாய் கிஷோா் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.