காமன்வெல்த் தொடரின் பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் குருராஜா வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஆடவருக்கான 61 கிலோ எடைப்பிரிவு பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் குருராஜா வெண்கலம் வென்றார். இந்திய வீரர் குருராஜா மொத்தம் 269 கிலோ எடையை தூக்கி 3ஆம் இடம் பிடித்தார்.
இதையும் படிக்க- ரசிகர்களை ஈர்த்த 14 வயது இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை (விடியோ)
இதன்மூலம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி 2ஆவது பதக்கத்தை வென்றுள்ளது. முன்னதாக 55 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சங்கேத் சர்கார் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.