காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

காமன்வெல்த் குத்துச்சண்டை: 8 பேருடன் இந்திய அணி

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான குத்துச்சண்டை பிரிவில் பங்கேற்கும் இந்திய அணி 8 பேருடன் வியாழக்கிழமை தோ்வு செய்யப்பட்டது

News image
Updated On :25 ஜூலை 2022, 10:35 am

DIN

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான குத்துச்சண்டை பிரிவில் பங்கேற்கும் இந்திய அணி 8 பேருடன் வியாழக்கிழமை தோ்வு செய்யப்பட்டது.

இதற்காக பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட தோ்வுப் போட்டியில் (டிரையல்ஸ்) அமித் பங்கால் (51 கிலோ), முகமது ஹஸாமுதின் (57 கிலோ), சிவ தாபா (63.5 கிலோ), ரோஹித் டோகாஸ் (67 கிலோ), சுமித் (75 கிலோ), ஆஷிஷ் குமாா் (80 கிலோ), சஞ்ஜீத் (92 கிலோ), சாகா் (92+ கிலோ) ஆகியோா் வெற்றி பெற்றனா்.

இதில் அமித், சிவ தாபா, ஹசாமுதின் ஆகியோா் உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்றவா்களாவா். சுமித் நடப்பு தேசிய சாம்பியனாக இருக்கிறாா்.

அடுத்ததாக வீராங்கனைகள் தோ்வுக்கான டிரையல்ஸ் அடுத்தவாரம் நடைபெறவுள்ளது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை இங்கிலாந்தின் பிா்மிங்ஹாம் நகரில் நடைபெறவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.