கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஆர்ஆர்ஆர் படத்தை பாராட்டிய ஹாலிவுட் திரைப்பட எழுத்தாளர்

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை பார்த்த ஹாலிவுட் திரைப்பட எழுத்தாளர் பாராட்டியுள்ளார். 

News image

கோப்புப் படம்

Updated On :7 ஜூன் 2022, 1:12 pm

DIN

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை பார்த்த ஹாலிவுட் திரைப்பட எழுத்தாளர் பாராட்டியுள்ளார். 

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் அல்லுரி சீதா ராமராஜூ (ராம் சரண்), கொமரம் பீம்(ஜூனியர் என்டிஆர்) என்கிற இரு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையை முன்வைத்து உருவாக்கப்பட்ட ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் வெளியாகி பெரிய வெற்றியைப் பதிவு செய்ததுடன் உலகளவில் ரூ. 1000 கோடிக்கும் அதிகமான வசூலை அடைந்துள்ளது.

சினிஸ்டர், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் ஆகிய ஹாலிவுட் படங்களுக்கு திரைக்கதை எழுதிய திரைப்பட எழுத்தாளர் சி.ரோபர்ட் கார்கில், “ நண்பர் பரிந்துரையின் பேரில் ஆர்ஆர்ஆர் படத்தினைப் பார்த்தேன். அந்தப் படத்தின் உண்மையான, முழுமையான ஒரு உறுப்பினராக மாறிவிட்டேன். நான் பார்த்ததிலேயே இது ஒரு அர்பணிப்புள்ள, வெறிகொண்ட, வினோதமான மிகப்பெரிய வெற்றிப் பெற்ற படம். கண்டிபாக நானும் ஜெஸ்ஸூம் இந்த வாரத்தில் இன்னொரு முறை இப்படத்தினை பார்ப்போம்” என தனது டிவிட்டர் பக்கத்தில் எழுதியிருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.