‘பயிற்சியாளர் எனும் பதவி தேவையில்லை; இங்கிலாந்து வீரர்களுக்கு உதவ நினைக்கிறேன்’ : கெவின் பீட்டர்சன்
இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் இளம் இங்கிலாந்து வீரர்களுக்கு உதவ நினைக்கிறேன் என கூறியுள்ளார்.


இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் இளம் இங்கிலாந்து வீரர்களுக்கு உதவ நினைக்கிறேன் என கூறியுள்ளார்.
பீட்டர்சன் 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8181 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 47.28. 2018இல் ஓய்வை அறிவித்ததை தொடர்ந்து தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார்.
17 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த நிலையில் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் ராஜிநாமா செய்தார். பின்னர் பென் ஸ்டோக்ஸ் புதிய கேப்டன் ஆனார். இதற்கு முன்னர் ராப் கீ ஈசிபியின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், மெக்குல்லம் டெஸ்ட் அணியின் புதிய பயிற்சியாளராகவும் பதவி ஏற்றார்கள்.
“பிரண்டன் மெக்குல்லமை இங்கிலாந்தின் டெஸ்ட் போட்டியின் பயிற்சியாளராக நியமித்தது மிகவும் சுவாரசியமான தேர்வு. அவரது அதிரடியான ஆட்டம்தான் பென்ஸ்டோக்ஸ், ராப் கீ ஆகியோருக்கு தேவைப்படுகிறது. மக்களும் அதைதான் விரும்புகிறார்கள். இது முக்கியமான மாற்றமாக பார்க்கிறேன்.
நான் இங்கிலாந்தின் இளம் புதிய தலைமுறை பேட்ஸ்மேன்களுக்கு உதவ நினைக்கிறேன். புதியதாக சிந்திக்கும், புதுமையாக விளையாட ஆசைப்படும் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
உலகம் முழுவதும் ஏராளமான பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். அதனால் நானும் பயிற்சியாளர் பதவிக்காக இப்படி பேசுகிறேன் என நினைக்காதீர்கள். பயிற்சியாளர் எனும் பதவி எனக்கு தேவையில்லை; இங்கிலாந்தின் இளம் வீரர்களுக்கு உதவ நினைக்கிறேன்” என கெவின் பீட்டர்சன் ஆங்கில ஊடகம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...