பவுலராக அசத்திய நிகோலஸ் பூரன்

மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் நிகோலஸ் பூரன் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பந்து வீசி 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.  
பவுலராக அசத்திய நிகோலஸ் பூரன்
Updated on
1 min read

மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் நிகோலஸ் பூரன் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பந்து வீசி 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.  

மேற்கிந்திய தீவுகள் அணி பாகிஸ்தானுடன் விளையாடிய மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது  மே.இ. அணியின் கேப்டன் பூரன் பந்து வீசினார். சாய் ஹோப் கீப்பிங் செய்தார். பூரன் பந்து வீசி முக்கியமான 4 விக்கெட்டுகளை எடுத்தார். அவரது முதல் சர்வதேச விக்கெட்டும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. 

பேட்டிங், கீப்பர் என்ற வரிசையில் தற்போது பவுலிங்கையும் சேர்த்துள்ளார். 

முன்னாள் பிரபலமான மேற்கிந்திய தீவுகள் அணி வீரரும் வர்ணனையாளருமான இயன் பிஷப் பூரனின் விடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, “நிகோலஸ் முரளி பூரன்” என தலைப்பிட்டுள்ளார். 

பூரன் ஐபிஎல் 2022 போட்டிகளில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். அந்த அணிக்கு பந்துவீசும் பயிற்சியாளராக இருப்பவர் டெஸ்டில் அதிக விக்கெட் எடுத்த முத்தையா முரளிதரன். 

பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றாலும் நிகோலஸ் பூரன் இதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு அடுத்து வரும் போட்டிகளில் கவனம் செலுத்தவிருப்பதாக கூறியுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com