பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

ஒரே சமயத்தில் பயிற்சியாளாராகவும் கேப்டனாகவும் செயல்பட முடியாது: ஷகிப் அல் ஹசன்

வங்கதேச அணியின் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் ஷகிப் அல் ஹசன் தன்னால் ஒரே சமயத்தில் பயிற்சியாளாராகவும் கேப்டனாகவும் செயல்பட முடியாது என கூறியுள்ளார்.

News image
கோப்புப் படம்
Updated On :20 ஜூன் 2022, 9:25 am

DIN

வங்கதேச அணியின் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் ஷகிப் அல் ஹசன் தன்னால் ஒரே சமயத்தில் பயிற்சியாளாராகவும் கேப்டனாகவும் செயல்பட முடியாது என கூறியுள்ளார். 

வங்க தேசம் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் மே.இ. அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. வங்க தேச அணியில் கேப்டன் ஷகிப் மட்டும் முதல் இன்னிங்ஸில் 51, இரண்டாவது இன்னிங்ஸில் 63 ரன்களும் எடுத்தார். இருப்பினும் மற்ற வீரர்களின் மோசமான பேட்டிங் காரணமாக முதல் டெஸ்ட் போட்டி தோல்வியில் முடிவடைந்தது. இதைக் குறித்து ஷகிப் அல் ஹசன் கூறியதாவது:

இந்தப் போட்டியில் நான் அதிகமாக எதுவும் எதிர் பாரக்கவில்லை. ஆனால், எங்களால் இன்னும் சிறப்பாக விளையாட முடியும் என நம்புகிறேன். முதல் இன்னிங்ஸில் மிகவும் குறைவான ரன் எடுத்ததால் ஆட்டம் மிகவும் பாதித்தது. எங்களிடம் மிகவும் டெக்கினிக்கலாக விளையாடும் வீரர்கள் குறைவு. 

எல்லோருக்கும் டெக்கினிக்கல் பிரச்சனை இருக்கிறது. இருப்பினும் அவர்களது குறையை கண்டறிந்து சமாளித்து விளையாட வேண்டும். இது ஒருவரின் தனிப்பட்ட இடத்திலிருந்து வர வேண்டும். மேலும் இது பயிற்சியாளரின் வேலை. என்னால் ஒரே சமயத்தில் பயிற்சியாளாராகவும் கேப்டனாகவும் செயல்பட முடியாது. அவரவர் வேலையை அவரவர்கள் செய்தால் எனக்கு உதவியாக இருக்கும்.  

அணியில் மாற்றங்களை ஏற்படுத்தினால் மட்டும் அணிக்கு நல்லது ஏறபடுமென உறுதியாக கூற முடியாது. அணியாக சிறப்பாக விளையாட வேண்டும். அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவோமென நம்புகிறோம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.