19 வயதிற்குள்ளான காது கேளாதோருக்கான முதல் டி20 தொடரில் ஆந்திரம் கோப்பையை வென்று சாதனைப் புரிந்துள்ளது.
இந்திய காது கேளாதோர் கிரிக்கெட் சங்கம் (IDCA)முதன் முறையாக 19 வயதிற்குள்ளான காது கேளாதோருக்கான டி20 தொடரை துவக்கியது. ஜூன் 16 முதல் ஜூன் 19 இப்போட்டிகள் நடைப்பெற்றது.
ஆந்திரம் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. எதிரணியாகிய குஜராத்தை 97 ரன்களுக்குள் சுருட்டியது ஆந்திரம்.
ஆந்திராவின் பவுலர் விஜய பாஸ்கர் 3 விக்கெட்டுகளை எடுத்து 11 ரன்களை மட்டுமே கொடுத்தார். மேலும் இவர் ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதினையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய காது கேளாதோர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர், சுமித் ஜெயின் பரிசளிப்பு விழாவில் கூறியதாவது:
இந்திய காது கேளாதோர் கிரிக்கெட் சங்கமாகிய நாங்கள் முதன் முறையாக இந்தத் தொடரின் வெற்றியாளராக ஆந்திரம் காது கேளாதோர் அமைப்பிற்கு பரிசளிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எல்லா அணியின் வீரர்களும் கடினமான உழைத்ததினால் இந்த சீசன் வெற்றியடைந்துள்ளது. எதிர்காலத்தில் இன்னும் இது போன்ற அதிகமான திறமைசாலிகளை உருவாக்குவதற்கு எதிர்நோக்கியுள்ளோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் குற்றச்சாட்டு
இந்திய வீராங்கனகைள் ப்ரீதி, பிரியா அருந்ததி, அபாரம்: இறுதிக்கு தகுதி!

தலைமைத் தோ்தல் ஆணையா் பதவி நீக்க நோட்டீஸ் நிராகரிப்பு: காங்கிரஸ் விமா்சனம்

கொலை செய்யப்பட்ட சடலத்துடன் காட்டில் இருந்த சிறுவன்
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


