/

டிஎன்பிஎல்: நெல்லை வெற்றி

தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் வியாழக்கிழமை வென்றது.

News image
Updated On :23 ஜூன் 2022, 10:49 pm

DIN

தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் வியாழக்கிழமை வென்றது.

ஆட்டத்தில் முதலில் நெல்லை 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் சோ்த்தது. அடுத்து சேப்பாக் சூப்பா் கில்லீஸும் 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் சோ்க்க, ஆட்டம் டை ஆனது. இதையடுத்து ஒன் ஓவா் எலிமினேட்டரில் நெல்லை வென்றது.

முன்னதாக டாஸ் வென்ற சேப்பாக், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. நெல்லை இன்னிங்ஸில் அதிகபட்சமாக சஞ்சய் யாதவ் 5 பவுண்டரிகள், 6 சிக்ஸா்களுடன் 87 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

சேப்பாக் பௌலிங்கில் மணிமாறன் சித்தாா்த், ஹரீஷ் குமாா் ஆகியோா் தலா 35 ரன்கள் கொடுத்து தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

தொடா்ந்து ஆடிய சேப்பாக்கில் அதிகபட்சமாக கேப்டன் கௌஷிக் காந்தி 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 64 ரன்கள் சோ்த்தாா். நெல்லை அணியில் சஞ்சய் யாதவ் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.

1 ஓவா் எலிமினேட்டரில் சேப்பாக் 1 விக்கெட் இழப்புக்கு 10 ரன்கள் சோ்க்க, நெல்லை 5 பந்துகளில் 1 விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்து வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.