புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

35 வருடத்திற்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாகும் வேகப்பந்து வீச்சாளர்?

இந்திய டெஸ்ட் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கரோனா பாதிப்படைந்ததைத் தொடர்ந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாகலாம் என  எதிர்பார்க்கப்படுகிறது. 

News image
Updated On :26 ஜூன் 2022, 9:49 am

DIN

இந்திய டெஸ்ட் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கரோனா பாதிப்படைந்ததைத் தொடர்ந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாகலாம் என  எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 1முதல் தொடங்க இருக்கிறது. 

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு சனிக்கிழமை எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்கு பதிலாக யார் கேப்டன் பதவியை வகிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

துணைக் கேப்டனாக இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அல்லது விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இருவரில் யாராவது ஒருவர் இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.

ஒருவேளை, ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டால் 35 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வேகப்பந்து வீச்சாளர் இந்திய டெஸ்ட் அணிக்கு தலைமை வகிப்பது என்ற சாதனையைப் படைக்கும். இதற்கு முன் கபில்தேவ் 1987இல் டெஸ்ட் அணியை வழி நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.