இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அயர்லாந்தில் இரு டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது இந்திய அணி. இதற்கான அதிகாரபூர்வ அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்குப் பிறகு அந்த அணியுடன் இரு டெஸ்டுகளில் விளையாடுகிறது இந்திய அணி. இலங்கை தொடருக்குப் பிறகு ஏப்ரல், மே மாதங்களில் ஐபிஎல் போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதற்கான அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.
ஐபிஎல் போட்டி முடிவடைந்த பிறகு தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஜூன் 9-ல் தொடங்கும் டி20 தொடர் ஜூன் 19-ல் நிறைவடைகிறது.
இதன்பிறகு இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. கடந்த வருடம் இங்கிலாந்தில் ரத்தான 5-வது டெஸ்ட் ஜூலை 1, 2022 அன்று எக்பாஸ்டனில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 17 அன்று இந்திய அணியின் இங்கிலாந்துச் சுற்றுப்பயணம் நிறைவடைகிறது.
இந்நிலையில் இங்கிலாந்துடன் விளையாடுவதற்கு முன்பு அயர்லாந்துக்குச் சென்று இரு டி20 ஆட்டங்களில் இந்திய அணி பங்கேற்கிறது. இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதும் இரு ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் அட்டவணை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
அயர்லாந்தில் இந்திய அணி
ஜூன் 26 - முதல் டி20, மலாஹைட்
ஜூன் 28, - 2-வது டி20, மலாஹைட்
டி20 தொடர் முடிந்த அடுத்தச் சில நாள்களில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடங்கவுள்ளதால் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் யாரும் இடம்பெற மாட்டார்கள் என அறியப்படுகிறது. இதனால் புதிய வீரர்கள் பலருக்கும் வாய்ப்பு கிடைக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! தேர்தல் ஆணையம் அதிரடி!!

அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறுவாக்குப்பதிவு! எங்கு, ஏன்?

அழுத்தத்தில் சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட்; சிஎஸ்கேவுக்கு முதல் வெற்றி கிடைக்குமா?

ஓடிடியில் வெளியானது தாய் கிழவி!
வீடியோக்கள்

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை


