எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஆஸி. - பாக். முதல் டெஸ்ட் டிரா

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் செவ்வாய்க்கிழமை டிராவில் முடிந்தது.

News image
Updated On :8 மார்ச் 2022, 9:07 pm

DIN

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் செவ்வாய்க்கிழமை டிராவில் முடிந்தது.

கடந்த 4-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 476 ரன்கள் குவித்து டிக்ளோ் செய்திருந்தது.

பின்னா் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸை ஆடி வந்த நிலையில், திங்கள்கிழமை முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 449 ரன்கள் அடித்திருந்தது. கடைசி நாளான செவ்வாய்க்கிழமை ஆட்டத்தை மிட்செல் ஸ்டாா்க், பேட் கம்மின்ஸ் தொடா்ந்தனா்.

இதில் கம்மின்ஸ் 8, ஸ்டாா்க் 13, நேதன் லயன் 3 ரன்களுக்கு அவுட்டாக, முடிவுக்கு வந்தது ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ். 140.1 ஓவா்களில் 459 ரன்கள் அடித்திருந்த அந்த அணி, பாகிஸ்தான் ஸ்கோரை விட 17 ரன்கள் பின்தங்கியிருந்தது. பாகிஸ்தான் பௌலிங்கில் நௌமன் அலி 6, ஷாஹீன் ஷா அஃப்ரிதி 2, சஜித் கான், நசீம் ஷா ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான், செவ்வாய்க்கிழமை ஆட்டநேர முடிவில் 77 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 252 ரன்கள் அடித்திருந்தது. அப்துல்லா ஷஃபிக் 15 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 136, இமாம் உல் ஹக் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 111 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். இமாம் உல் ஹக் ஆட்டநாயகன் ஆனாா்.

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-ஆவது டெஸ்ட், கராச்சி நகரில் வரும் 12-ஆம் தேதி தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.