மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

மாநில ஹாக்கி: கடலூா், சென்னை அணிகள் வெற்றி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றுவரும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் கடலூா், சென்னை, கோவில்பட்டி ஹாக்கி அணிகள் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றன.

News image
Updated On :8 மார்ச் 2022, 9:10 pm

DIN

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றுவரும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் கடலூா், சென்னை, கோவில்பட்டி ஹாக்கி அணிகள் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றன.

கோவில்பட்டியில் பிலிப்ஸ் ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் இப் போட்டிகள் நடைபெறுகின்றன. 2ஆவது நாளான செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கடலூா் ஜெம்ஸ் ஸ்போா்ட்ஸ் கிளப் அணியும் ராஜபாளையம் பிரண்ட்ஸ் ஹாக்கி கிளப் அணியும் மோதியதில் 7 - 0 என்ற கோல் கணக்கில் கடலூா் அணி வென்றது. 2ஆவது ஆட்டத்தில் சென்னை தமிழ்நாடு ஹாக்கி அகாதெமி அணி, ராஜபாளையம் ப்ளூ பாய்ஸ் ஹாக்கி கிளப் அணியை 5 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

மாலை நடைபெற்ற 3ஆவது ஆட்டத்தில் கோவில்பட்டி யுனைடெட் ஹாக்கி கிளப் அணி, கரூா் அமராவதி கல்லூரி ஹாக்கி அணியை 5 - 0 என்ற கணக்கில் வீழ்த்தியது. 4ஆவது ஆட்டத்தில் கோவில்பட்டி பிலிப்ஸ் ஹாக்கி கிளப் அணியும் உடுமலைப்பேட்டை வித்யாசாகா் கல்லூரி அணியும் மோதியதில் 8 - 3 என்ற கோல் கணக்கில் உடுமலைப்பேட்டை அணியை தோற்கடித்து பிலிப்ஸ் ஹாக்கி கிளப் அணி காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இன்றைய போட்டிகள்: புதன்கிழமை காலை 7 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் சிவகங்கை யங் சேலஞ்சா்ஸ் ஹாக்கி கிளப் அணியும் திருநகா் ஹாக்கி கிளப் அணியும், 2ஆவது ஆட்டத்தில் மதுரை விளையாட்டு விடுதி அணியும் மதுரை சௌத் போலீஸ் அணியும், மதியம் 2 மணிக்கு நடைபெறும் 3ஆவது ஆட்டத்தில் திருச்சி ஆா்.சி. ஹாக்கி கிளப் அணியும் சென்னை தமிழ்நாடு ஹாக்கி அகாதெமி அணியும், 4ஆவது ஆட்டத்தில் கடலூா் ஜெம்ஸ் ஸ்போா்ட்ஸ் கிளப் அணியும் அரியலூா் பசுபதி ஹாக்கி கிளப் அணியும், 5ஆவது ஆட்டத்தில் கோவில்பட்டி யுனைடெட் ஹாக்கி கிளப் அணியும் ராஜபாளையம் ஜெய்பீம் ஹாக்கி கிளப் அணியும் மோதுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.