பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

டி20 கிரிக்கெட்டில் முக்கிய வீரராக நான் ஏன் இல்லை?: கருண் நாயர் பதில்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இந்த வருடம் எனக்குச் சிறப்பாக அமையும் என எண்ணுகிறேன்.

News image
Updated On :22 மார்ச் 2022, 12:03 pm

DIN

2016-ல் சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக முச்சதம் அடித்த கருண் நாயர், அதன்பிறகு வாய்ப்புகள் குறைந்து இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டார். ஐபிஎல் போட்டியிலும் கருண் நாயர் பெரிதாக ஜொலிக்கவில்லை. ஐபிஎல் போட்டியில் 73 ஆட்டங்களில் விளையாடி 1480 ரன்கள் எடுத்துள்ளார். 10 அரை சதங்கள். 

சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ரூ. 1.40 கோடிக்கு கருண் நாயரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தேர்வு செய்தது. 

இந்நிலையில் ஐபிஎல் 2022 போட்டி பற்றி ஒரு பேட்டியில் கருண் நாயர் கூறியதாவது:

ஐபிஎல் போட்டியில் என்னை ஒரு முக்கிய வீரராகக் கருத மாட்டார்கள். இதற்குக் காரணம் டி20 கிரிக்கெட்டில் ஓர் அணியில் முக்கிய வீரராக நான் இருக்க மாட்டேன். நான் எந்த ஒரு ஆட்டத்தில் நான் அதிக ரன்கள் எடுத்தாலும் என்னை விடவும் இன்னொரு வீரர் அதிக ரன்கள் எடுத்து பெயர் வாங்கிவிடுவார் (சிரிக்கிறார்). அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. அணியின் வெற்றிக்காகவே நான் விளையாடுகிறேன். 

என்னை டி20 கிரிக்கெட்டின் சிறப்பு வீரராகப் பார்க்காததற்குக் காரணம், அணியில் எனக்கு வெவ்வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டு பல்வேறு நிலைகளில் பேட்டிங் செய்வதுதான். சில நேரங்களில் இது சரியாக அமையும். சில நேரங்களில் சரியாக அமையாது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இந்த வருடம் எனக்குச் சிறப்பாக அமையும் என எண்ணுகிறேன். நான் என்ன செய்யவேண்டும் எனக் கூறுகிறார்களோ அதைச் செய்வதில் மட்டும் கவனம் செலுத்தப் போகிறேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.