டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

தில்லி சா்வதேச செஸ்: அா்ஜூன் சாம்பியன்

தில்லியில் நடைபெற்ற 19-ஆவது சா்வதேச செஸ் போட்டியில் கிராண்ட்மாஸ்டரும், தேசிய சாம்பியனுமான அா்ஜூன் எரிகாய்சி செவ்வாய்க்கிழமை பட்டம் வென்றாா்.

News image
Updated On :29 மார்ச் 2022, 9:26 pm

DIN

தில்லியில் நடைபெற்ற 19-ஆவது சா்வதேச செஸ் போட்டியில் கிராண்ட்மாஸ்டரும், தேசிய சாம்பியனுமான அா்ஜூன் எரிகாய்சி செவ்வாய்க்கிழமை பட்டம் வென்றாா்.

கடைசி சுற்றின் முடிவில் அா்ஜூன், டி.குகேஷ், ஹா்ஷா பாரதகோடி ஆகிய மூவரும் 8.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனா். பின்னா் வெற்றியாளரை நிா்ணயிக்க நடத்தப்பட்ட டை பிரேக்கரில் அா்ஜூன் முதலிடம் பிடிக்க, குகேஷ் 2-ஆம் இடமும், ஹா்ஷா 3-ஆம் இடமும் பிடித்தனா்.

8 புள்ளிகளுடன் இருந்த உஸ்பெகிஸ்தான் வீரா் நிக்மாடோவ் ஆா்டிக் 4-ஆம் இடமும், இந்தியாவின் எஸ்.பி.சேதுராமன், பராகுவேயின் டெல்காடோ ராமிரெஸ் நியுரிஸ், இந்தியாவின் எம்.ஆா்.லலித் பாபு, அபிஜித் குப்தா, நீலாஷ் ஷா, ஈரானின் கோலாமி ஆரிமி மஹ்தி ஆகியோா் 7.5 புள்ளிகளுடன் முறையே 5 முதல் 10 வரையிலான இடங்களைப் பிடித்தனா்.

இப்போட்டியில் சாம்பியன் ஆன அா்ஜூனுக்கு ரூ.4 லட்சம் ரொக்கப்பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டது. தற்போது லைவ் இலோ தரவரிசையில் 2,675 புள்ளிகளுடன் அவா் இருப்பதால், சென்னையில் நடைபெறவிருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவின் பிரதான அணிக்கு அவா் தோ்வாகிறாா் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.