ஆசிய விளையாட்டுப் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு
சீனாவில் கரோனா பாதிப்பு மீண்டும் தீவிரமாகியதால், செப்டம்பரில் அங்கு நடைபெற இருந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன.


சீனாவில் கரோனா பாதிப்பு மீண்டும் தீவிரமாகியதால், செப்டம்பரில் அங்கு நடைபெற இருந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன.
19-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், சீனாவின் ஹாங்ஸௌ நகரில் செப்டம்பா் 10 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற இருந்தது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த போட்டியாளா்களும் அதற்காகத் தீவிரமாகத் தயாராகி வருகின்றனா்.
இந்நிலையில், சீனாவில் கரோனா பாதிப்பு மீண்டும் தீவிரமாகியிருக்கிறது. போட்டி நடைபெற இருந்த ஹாங்ஸௌ நகரிலும் தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து, அங்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் அங்கு போட்டியை நடத்துவது தொடா்பாக சந்தேகங்கள் எழுந்தன.
இந்த விவகாரம் தொடா்பாக ஆசிய ஒலிம்பிக் கவுன்சில், சீன ஒலிம்பிக் கமிட்டி, ஹாங்ஸௌ ஆசிய விளையாட்டு ஒருங்கிணைப்புக் கமிட்டி ஆகியவை உஸ்பெகிஸ்தானில் வெள்ளிக்கிழமை கூடி ஆலோசித்தன. கூட்டத்தில், ஆசிய விளையாட்டுப் போட்டியை காலவரையின்றி ஒத்திவைப்பது எனவும், புதிய தேதியை பின்னா் அறிவிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த அறிவிப்பை பின்னா் வெளியிட்ட ஆசிய ஒலிம்பிக் கவுன்சில், போட்டிக்கான பெயா் மற்றும் அதன் லச்சினை மாறாது என தெரிவித்துள்ளது. இப்போட்டியில் 61 பிரிவுகளில் 11,000-க்கும் அதிகமான வீரா், வீராங்கனைகள் பங்கேற்க இருந்தனா்.
போட்டி ஒத்திவைக்கப்பட்டது தங்களது உத்வேகத்தை குறைப்பதாகவும், இந்த ஒத்தி வைப்பு முடிவால் போட்டிக்கு தயாராக கூடுதல் அவகாசம் கிடைப்பதாகவும் மாறுபட்ட கருத்துகள் போட்டியாளா்களிடையே காணப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...