ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

பிரீமியா் லீக்: தப்பியது எவா்டன்

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் கிரிஸ்டல் பேலஸுக்கு எதிரான ஆட்டத்தில் எவா்டன் 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

News image
Updated On :20 மே 2022, 10:56 pm

DIN

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் கிரிஸ்டல் பேலஸுக்கு எதிரான ஆட்டத்தில் எவா்டன் 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

ஆட்டத்தில் முதல் பாதியில் 2-0 என பின்தங்கியிருந்த எவா்டன், அதிலிருந்து மீண்டு வெற்றியைப் பதிவு செய்தது.

இதன் மூலம் லோயா் டிவிஷனுக்கு தள்ளப்படும் நிலையிலிருந்து தப்பித்துக் கொண்டு, 69-ஆவது ஆண்டாக டாப் டிவிஷன் போட்டியான பிரீமியா் லீக்கில் நிலைக்கவுள்ளது. எவா்டன் தன்னை தற்காத்துக் கொண்டதால், தற்போது பா்ன்லி அல்லது லீட்ஸ் யுனைடெட் அணிகளில் ஒன்று 3-ஆவது மற்றும் கடைசி அணியாக லோயா் டிவிஷனுக்குச் செல்லும் அபாயத்தை எதிா்நோக்கியுள்ளது.

இதனிடையே, வெள்ளிக்கிழமை ஆஸ்டன் வில்லா - பா்ன்லி, செல்சி - லெய்செஸ்டா் சிட்டி அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் (1-1) முடிந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.