தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கும்ப்ளே எப்படி தனது டெஸ்ட் வாழ்க்கையை மீட்டார்: சேவாக் விளக்கம்

இந்தியாவின் தலைச் சிறந்த டெஸ்ட் ஓப்பனரான சேவாக் தனது டெஸ்ட் வாழ்க்கையை கும்ப்ளே எவ்வாறு மீட்டாரென சமீபத்தில் ஆங்கில செய்தி சேனலொன்றுக்குப் பேட்டியளித்துள்ளார். 

News image
Updated On :24 மே 2022, 12:53 pm

DIN

இந்தியாவின் தலைச் சிறந்த டெஸ்ட் ஓப்பனரான சேவாக் தனது டெஸ்ட் வாழ்க்கையை கும்ப்ளே எவ்வாறு மீட்டாரென சமீபத்தில் ஆங்கில செய்தி சேனலொன்றுக்குப் பேட்டியளித்துள்ளார். 

2007 ஜனவரியில் 52வது டெஸ்ட் போட்டியை விளையாடிய சேவாக் தனது 53வது போட்டியை 2008இல் ஆஸ்திரேலியாவில் விளையாடினார். 

“நான் அப்போது டெஸ்டில் 10000 ரன்களை கடந்திருந்தேன். திடீரென டெஸ்ட் போட்டியிலிருந்து எனது பெயர் இல்லாமல் போனது கஷ்டமாக இருந்தது”. 

பிறகு, கும்ளே தலைமையில் 2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் கோப்பைத் தொடரில் சேவாக்கு வாய்ப்பு கிடைத்தது. அதிலும் முதலிரண்டுப் போட்டிகளில் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அந்த இரண்டுப் போட்டிகளிலும் இந்தியா தோல்வியுற்றது. மூன்றாவதுப் போட்டியில் 63 ரன்களை மட்டுமே எடுத்தார். இந்தியா வெற்றிப் பெற்றது. நான்காவதுப் போட்டியில் 151 ரன்களை எடுத்தார். அது இந்திய அணியை தோல்வியில் இருந்து காப்பற்றியது. அந்த ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

“முதலில் எடுத்த 60 ரன்கள்தான் நான் வாழ்கையிலே கஷ்டப்பட்டு எடுத்த ரன்களாகும். ஏனெனில் என்னைத் தேர்ந்தெடுத்ததுக்காக கும்ப்ளே யாரிடமும் அவமானப்படக்கூடாது என விரும்பினேன். விளையாடும் போது கவனமாக ஆடினேன். மறுபுறத்திலிருக்கும் போது நடுவர்களிடம் பேசுவேன். எனக்கு பிடித்தமான பாடலை முனகுவேன். அழுத்தம் குறைந்தது”. 

அந்தத் தொடர் முடிந்ததும் கும்ப்ளே, “ நான் டெஸ்ட் கேப்டனாக நீடிக்கும் வரை உன்னை அணியிலிருந்து நீக்கமாட்டேன்” எனக் கூறினார். “அதுதான் ஒரு வீரருக்குத் தேவை. இதற்கு முன்பு கங்குலி தலைமையில் நான் இவ்வாறு பாதுகாப்பாக உணர்ன்ந்தேன்”.

மேலும் சேவாக் தனது சிறந்த பவுலிங் 5/ 104 சாதனையை கும்ப்ளே தலைமையில் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

“அந்தத் தொடரில் அனில் கும்ப்ளே கேப்டனாக இல்லையெனில் அந்தத் தொடரே கைவிடப்பட்டிருக்கும். மேலும், என்னுடையது மட்டுமில்லாமல் ஹர்பஜன் சிங் கிரிக்கெட் வாழ்க்கையும் அத்தோடு முடிந்திருக்கும்” என சேவாக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.