டி20 உலக்கோப்பையில் தென்னாப்பிரிக்காவை நெதர்லாந்து வீழ்த்தியதால் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
அடிலெய்டில் இன்று நடந்த சூப்பர் 12 சுற்று போட்டியில் முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. 159 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியில் வீரர்கள் யாரும் நிலைத்து ஆடவில்லை.
இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் நெதர்லாந்து அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நெதர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்ததால் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து தென்னாப்பிரிக்கா அணி வெளியேறியது. இதையடுத்து, குரூப் பி பிரிவில் 6 புள்ளிகள் பெற்றுள்ள இந்திய அணி டி20 உலகக்கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
அதேசமயம் வங்கசேதம், பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறும் போட்டியில் வெல்லும் அணியும் அரையிறுதிக்கு முன்னேறும். ஐசிசி தொடர்களில் முக்கியமான போட்டியில் தோற்று வெளியேறும் தென்னாப்பிரிக்காவின் சோகம் தொடர்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுசீரமைப்பை அவசரமாகக் கொண்டு வருவது ஏன்? முதல்வர் மு.க. ஸ்டாலின்

🔴கேரளம்: வாக்காளர்களுக்கு சாதகமாக வெய்யில் நிலவரம் - செய்திகள் உடனுக்குடன்!

🔴புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

கேரள சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்கு செலுத்திய நடிகர் மோகன்லால்!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


