தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

விஜய் ஹசாரே: தொடர்ச்சியாக 3-வது சதமடித்த தமிழக வீரர் ஜெகதீசன்!

கோவா அணிக்கு எதிராகத் தமிழக அணி, 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் எடுத்தது.

News image

ஜெகதீசன் (கோப்புப் படம்)

Updated On :17 நவம்பர் 2022, 8:40 am

DIN

விஜய் ஹசாரே போட்டியில் கோவா அணிக்கு எதிராகத் தமிழக அணி, 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் எடுத்தது.

இந்த வருட விஜய் ஹசாரே போட்டியில் பிகாருக்கு எதிரான தமிழக அணியின் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. அடுத்த ஆட்டத்தில் ஆந்திராவை எளிதாக வீழ்த்தியது தமிழக அணி. 3-வது ஆட்டத்தில் சத்தீஸ்கர் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்நிலையில் அலூரில் நடைபெற்று வரும் தனது 4-வது ஆட்டத்தில் கோவா அணியை எதிர்கொண்டது தமிழ்நாடு. டாஸ் வென்ற கோவா அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் தமிழகத் தொடக்க வீரர்களான சாய் சுதர்சனும் என். ஜெகதீசனும் இன்றும் அபாரமாக விளையாடினார்கள். 41-வது ஓவரில் தான் இந்தக் கூட்டணியை கோவாவால் பிரிக்க முடிந்தது. சாய் சுதர்சன் 117 ரன்களுக்கும் ஜெகதீசன் 140 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகளுடன் 168 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள். பிறகு ஷாருக் கான் 29 ரன்களும் பாபா அபரஜித் 31 ரன்களும் எடுத்தார்கள். இந்த வருடப் போட்டியில் தொடர்ச்சியாக 3 சதங்களை ஜெகதீசனும் தொடர்ச்சியாக 2 சதங்களை சாய் சுதர்சனும் எடுத்துள்ளார்கள்.

தமிழக அணி, 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் எடுத்தது. அர்ஜுன் டெண்டுல்கர், பிரபுதேசாய் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.