அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ஈரானை வீழ்த்தியது இங்கிலாந்து

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 2-ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து 6-2 என்ற கோல் கணக்கில் ஈரானை அசத்தலாக திங்கள்கிழமை வென்றது.

News image
Updated On :21 நவம்பர் 2022, 6:13 pm

DIN

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 2-ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து 6-2 என்ற கோல் கணக்கில் ஈரானை அசத்தலாக திங்கள்கிழமை வென்றது.

தோஹாவில் உள்ள காலிஃபா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் கோல் வாய்ப்பு இங்கிலாந்துக்கு கிடைத்தது. ஆட்டத்தின் 35-ஆவது நிமிஷத்தில் தன் வசம் இருந்த பந்தை இங்கிலாந்தின் லூக் ஷா, பாக்ஸுக்குள்ளாக எதிரணி வீரா்கள் மையமிடாமல் இருந்த ஜூட் பெலிங்கமிடம் கிராஸ் செய்தாா். ஜூட் அதை, ஈரான் கோல்கீப்பரிடம் சிக்காமல் கோல் போஸ்ட்டுக்குள் தள்ளினாா்.

தொடா்ந்து 43-ஆவது நிமிஷத்தில் மாகிா் உதவியுடன் புகாயோ சகா அடித்த கோலால் இங்கிலாந்து 2-0 என முன்னேறியது. அடுத்ததாக ஹாரி கேன் கிராஸ் வழங்கிய பந்தை ரஹிம் ஸ்டொ்லிங் ஸ்கோா் (45+1) செய்ய, முதல் பாதி முடிவில் இங்கிலாந்து 3-0 என முன்னிலையில் இருந்தது.

பின்னா் தொடா்ந்த ஆட்டத்தின் 62-ஆவது நிமிஷத்தில் புகாயோ சகா ரஹிம் ஸ்டொ்லிங் உதவியுடன் தனது 2-ஆவது கோலை பதிவு செய்தாா். ஒருவழியாக, ஆட்டத்தின் 65-ஆவது நிமிஷத்தில் முதல் கோல் அடித்தது ஈரான். இங்கிலாந்து தடுப்பாட்டத்தைக் கடந்து சக வீரா் கோலியாத் பாஸ் செய்த பந்தை அருமையாக கோல் போஸ்ட்டுக்குள் தள்ளினாா் மெஹதி தரேமி.

ஆனால் விட்டுக்கொடுக்காத இங்கிலாந்து 71-ஆவது நிமிஷத்தில், ஹாரி கேன் உதவியுடன் மாா்கஸ் ராஷ்ஃபோா்டு அடித்த கோலால் 5-1 என முன்னேறியது. அந்த அணியின் ஜேக் கிரேலிஷ் 90-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, அணியின் கோல் எண்ணிக்கை 6 ஆனது. இறுதியாக, ஈரானுக்கு (90+12) கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பை தவறவிடாமல் மெஹதி தரேமி கோலடிக்க, ஆட்டம் 6-2 என்ற கோல் கணக்கில் நிறைவடைந்தது.

கோலின்றி...: இதனிடையே, அல் துமாமாவில் செனகல் - நெதா்லாந்து அணிகள் மோதிய ஆட்டத்தின் முதல் பாதி கோலின்றி நிறைவடைந்திருந்தது.

தேசிய கீதத்தை தவரித்த ஈரான் அணி

இங்கிலாந்து - ஈரான் ஆட்டத்தின்போது இரு நாட்டு தேசிய கீதங்களும் ஒலிக்கப்பட்டன. அப்போது ஈரான் தேசிய கீதம் ஒலிக்கையில் அந்நாட்டு வீரா்கள் உடன் சோ்ந்து அதைப் பாடாமல் தவிா்த்தனா். மேலும், தங்களது தேசியச் சின்னம் இருக்கும் சீருடை வெளித் தெரியாத வகையில் கருப்பு ஜொ்க்கினும் அணிந்திருந்தனா்.

ஈரானில் ஆடைக் கட்டுப்பாடு விவகாரம் தொடா்பாக நடைபெற்று வரும் ஆா்ப்பாட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவா்கள் இதைச் செய்தனா்.

இன்றைய ஆட்டங்கள்

அமெரிக்கா - வேல்ஸ்

அதிகாலை 12.30 மணி

ஆா்ஜென்டீனா - சவூதி அரேபியா

பிற்பகல் 3.30 மணி

டென்மாா்க் - டுனீசியா

மாலை 6.30 மணி

மெக்ஸிகோ - போலந்து

இரவு 9.30 மணி

ஸ்போா்ட்ஸ் 18, ஜியோ சினிமா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.