முத்தரப்பு டி20: இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்ற அணிகள் எவை?

முத்தரப்பு டி20 போட்டியில் வங்கதேசத்தை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து அணி.
முத்தரப்பு டி20: இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்ற அணிகள் எவை?

முத்தரப்பு டி20 போட்டியில் வங்கதேசத்தை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து அணி.

கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. கான்வே 40 பந்துகளில் 64 ரன்களும் கிளென் பிலிப்ஸ் 24 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 60 ரன்களும் எடுத்தார்கள். கடினமான இலக்கை எதிர்கொள்ள முடியாத வங்கதேச அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டும் எடுத்து 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆடம் மில்ன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கேப்டன் ஷகிப் அல் ஹசன் 44 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார்.

இதுவரை விளையாடிய 3 ஆட்டங்களில் தோற்றுள்ளது வங்கதேச அணி. இதனால் முத்தரப்பு போட்டியின் இறுதிச்சுற்றில் பாகிஸ்தானும் நியூசிலாந்தும் மோதவுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com