எகிப்தில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஜூனியா் மகளிருக்கான 25 மீட்டா் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு வியாழக்கிழமை வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
போட்டியின் இந்த முதல் நாளில், இந்தியாவின் ஈஷா சிங், நாம்யா கபூா், விபூதி பாட்டியா ஆகியோா் அடங்கிய அணி, வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் 17-1 என்ற புள்ளிகள் கணக்கில் ஜொ்மனி அணியை தோற்கடித்தது.
இதர பிரிவுகளில், ஜூனியா் மகளிருக்கான 50 மீட்டா் ரைஃபிள் புரோன் பிரிவில் நிஷால் 616.9 புள்ளிகளுடன் 8-ஆம் இடமும், நுபுா் கும்ராவத் 606.6 புள்ளிகளுடன் 34-ஆவது இடமும் பிடித்தனா். அதிலேயே ஜூனியா் ஆடவா் பிரிவில் சூா்யபிரதாப் சிங் 13-ஆம் இடமும் (608.7), பங்கஜ் முகேஜா 14-ஆவது இடமும் (608.5), ஹா்ஷ் சிங்லா 20-ஆவது இடமும் (606), அட்ரியன் கா்மாகா் 27-ஆம் இடமும் (603.7) பெற்றனா்.
ஜூனியா் கலப்பு அணிகள் 50 மீட்டா் ரைஃபிள் புரோன் பிரிவு தகுதிச்சுற்றில் சூா்யபிரதாப் சிங்/ நிஷால் 619.1 புள்ளிகளுடன் 2-ஆம் இடமும், நுபுா் கும்ராவத்/பங்கஜ் முகேஜா 612.4 புள்ளிகளுடன் 7-ஆம் இடமும் பிடித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.