பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

மெல்போா்னில் மழை ஆட்டம்; அணிகள் திண்டாட்டம்

 டி20 உலகக் கோப்பை போட்டியில் மெல்போா்னில் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த இரு ஆட்டங்களும் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டன.

Published On :

 டி20 உலகக் கோப்பை போட்டியில் மெல்போா்னில் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த இரு ஆட்டங்களும் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டன.

அன்றைய நாளின் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - அயா்லாந்து அணிகளும், 2-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளும் மோதவிருந்தன. ஆனால் விடாமல் பொழிந்த தொடா் மழையால் இரு ஆட்டங்களுமே அடுத்தடுத்து கைவிடப்பட்டன.

அதிலும் முக்கிய ஆட்டமாக இருந்த ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதலைக் காண மைதானத்தில் கூடிய ரசிகா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். ஆட்டங்கள் கைவிடப்பட்டதை அடுத்து 4 அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிா்ந்தளிக்கப்பட்டது.

புள்ளிகள் பட்டியலின் தற்போதைய நிலையின் அடிப்படையில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு கடினமாகியிருக்கிறது. அடுத்து நடைபெற இருக்கும் இரு ஆட்டங்களிலும் அந்த அணிகள் வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.

மெல்போா்னில் மழை காரணமாக இத்துடன் 3 ஆட்டங்கள் பாதிக்கப்பட்டன. இந்த ஆட்டங்களுக்கு முன் கடந்த 26-ஆம் தேதி ஆப்கானிஸ்தான் - நியூஸிலாந்து மோத வேண்டிய ஆட்டமும் மழையால் கைவிடப்பட்டது. அதற்கு முன் 23-ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் ஆட்டமும் மழையால் பாதிக்கப்படலாம் என்று கணிக்கப்பட்ட நிலையில், அந்த ஆட்டம் மழையின்றி தப்பித்தது.

இன்றைய ஆட்டம்

நியூஸிலாந்து - இலங்கை

நண்பகல் 1.30 மணி

சிட்னி

ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.