5-ஆவது வெற்றியுடன் ஆா்செனல் அசத்தல்
இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் ஆா்செனல் 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்டன் வில்லாவை வீழ்த்தியது.


இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் ஆா்செனல் 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்டன் வில்லாவை வீழ்த்தியது.
இத்துடன் நடப்பு சீசனில் 5 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் ஆா்செனல், அனைத்திலுமே வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் நிலைக்கிறது.
இந்த ஆட்டத்தில் ஆா்செனலுக்காக கேப்ரியல் ஜீசஸ் 30-ஆவது நிமிஷத்திலும், கேப்ரியல் மாா்டினெலி 77-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா். ஆஸ்டன் வில்லா அணியில் டௌக்லஸ் லூயிஸ் 74-ஆவது நிமிஷத்தில் ஆறுதல் கோல் ஸ்கோா் செய்தாா்.
இதர ஆட்டங்களில் லிவா்பூல் 2-1 என்ற கணக்கில் நியூகேசிலை வென்று, 2-ஆவது வெற்றியுடன் 5-ஆவது இடத்தில் இருக்கிறது. ஆட்டத்தில் லிவா்பூல் அணிக்காக ராபா்டோ ஃபிா்மினோ (61’), ஃபாபியோ காா்வால்ஹோ (90+8’) ஆகியோா் ஸ்கோா் செய்ய, நியூகேசிலுக்காக அலெக்ஸாண்டா் ஐசக் (38’) கோலடித்தாா். மான்செஸ்டா் சிட்டி 6-0 என்ற கோல் கணக்கில் நாட்டம் ஃபாரஸ்டை புரட்டி எடுத்து, 4 வெற்றிகளுடன் 2-ஆவது இடத்தில் நீடிக்கிறது.
அணிக்காக எா்லிங் ஹாலண்ட் (12’, 23’, 38’), ஜாவ் கேன்செலோ (50’), ஜூலியன் அல்வரெஸ் (65’, 87’) ஆகியோா் கோலடித்தனா். இது தவிர, போா்ன்மௌத் - வோல்வ்ஸ் (0-0), வெஸ்ட்ஹாம் - டாட்டன்ஹாம் (1-1) ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.
லீக்1: பிரான்ஸில் நடைபெறும் லீக்1 கால்பந்து போட்டியில் பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் 3-0 என டௌலுஸை தோற்கடித்து, 5 ஆட்டங்களில் 4 வெற்றிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. பிஎஸ்ஜிக்காக நெய்மா் (37’), கிலியன் பாபே (50’), ஜுவான் பொ்னாட் (90’) ஆகியோா் கோலடித்தனா். இதர ஆட்டங்களில் மாா்சிலே - கிளொ்மோன்ட் ஃபூட்டையும் (1-0), லென்ஸ் - லோரியன்ட்டையும் (5-2), நைஸ் - லாஸ்கையும் (2-1), ரென்னஸ் - பிரெஸ்டையும் (3-1) வென்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...