டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியில் இரு வீரர்களைத் தேர்வு செய்யாதது குறித்துத் தனது ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன்.
அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. பும்ரா, ஹர்ஷல் படேல் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்கள். அஸ்வின், தினேஷ் கார்த்திக் ஆகிய தமிழக வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளார்கள். மாற்று வீரர்களாக முகமது ஷமி, ஷ்ரேயஸ் ஐயர், ரவி பிஸ்னோய், தீபக் சஹார் ஆகியோர் தேர்வாகியுள்ளார்கள்.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி பற்றி முன்னாள் கேப்டன் அசாருதீன் ட்விட்டரில் கூறியதாவது:
பிரதான அணியில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர், ஷமியை நீக்கியது பற்றி ஆச்சர்யப்படுகிறேன். தீபக் ஹூடாவுக்குப் பதிலாக ஷ்ரேயஸ் ஐயர், ஹர்ஷல் படேலுக்குப் பதிலாக ஷமி என்பதே என்னுடைய தேர்வு என்று கூறியுள்ளார்.