தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ட்விட்டரிலும் சாதனை படைத்த விராட் கோலி

ட்விட்டர் சமூகவலைத்தளத்தில் விராட் கோலியை 50 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். 

News image
Updated On :13 செப்டம்பர் 2022, 12:06 pm

DIN

ட்விட்டர் சமூகவலைத்தளத்தில் விராட் கோலியை 50 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். 

பிரபல வீரரான 33 வயது விராட் கோலி இந்திய அணிக்காக 2008 முதல் 102 டெஸ்டுகள், 262 ஒருநாள், 104 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். சமீபத்தில் இரண்டரை  ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் சதம் எடுத்தார் விராட் கோலி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக. இது அவருடைய 71-வது சர்வதேச சதம். 

ட்விட்டர், இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் விராட் கோலியை ஏராளமான பேர் பின்தொடர்கிறார்கள். இன்ஸ்டகிராமில் கோலியைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை - 211 மில்லியன். ஃபேஸ்புக்கில் 49 மில்லியன். இந்நிலையில் ட்விட்டரில் கோலியைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 50 மில்லியனாக உயர்ந்துள்ளது. இதையடுத்து இந்த எண்ணிக்கையை அடைந்த முதல் கிரிக்கெட் வீரர் என்கிற பெருமையை அடைந்துள்ளார் கோலி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.