குஜராத் டைட்டன்ஸ் அணி பதிவிட்ட ட்வீட்டால் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் அணியிலிருந்து விடைபெறுகிறா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் புதிதாக இரண்டு அணிகள் களமிறங்கின. அதில், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஒன்று. அந்த அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டார். ஐபிஎல் சீசனின் ஆரம்பம் முதலே குஜராத் அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதியில் கோப்பையையும் கைப்பற்றியது. அறிமுக சீசனிலேயே அந்த அணி கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது.
குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரராக ஷுப்மன் கில் விளையாடி வந்தார். இந்நிலையில், இன்று குஜாரத் டைட்டன்ஸ் அணி வெளியிட்டுள்ள ட்வீட் பதிவு ஒன்று ஷுப்மன் கில் அடுத்து வரும் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடுவாரா என்ற சந்தேகத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பதிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் கூறியிருப்பதாவது: “ நீங்கள் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் பயணித்தது நினைத்துப் பார்ப்பதற்கு சிறப்பான தருணம். உங்களது அடுத்த பயணத்திற்கு எங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.” எனப் பதிவிட்டுள்ளது.
இருப்பினும், ஷுப்மன் கில் குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து விலகுகிறாரா என்பது குறித்த அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

3-வது கூட்டணியில் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம்... மும்முனைப் போட்டிக்குத் தயாராகும் மேற்கு வங்கம்!

விறுவிறுப்பான கிளைமேக்ஸ் காட்சிகள்... நிறைவடைந்த காத்து வாக்குல ரெண்டு காதல் தொடர்!

ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

