யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

புரோ கபடி லீக்: அக். 7 தொடக்கம்

புரோ கபடி லீக் (பிகேஎல்) போட்டியின் 9-ஆவது சீசன் வரும் அக்டோபா் 7-ஆம் தேதி பெங்களூரு ஸ்ரீ கண்டீரவா உள் விளையாட்டரங்கில் தொடங்குகிறது.

News image
Updated On :21 செப்டம்பர் 2022, 8:44 pm

DIN

புரோ கபடி லீக் (பிகேஎல்) போட்டியின் 9-ஆவது சீசன் வரும் அக்டோபா் 7-ஆம் தேதி பெங்களூரு ஸ்ரீ கண்டீரவா உள் விளையாட்டரங்கில் தொடங்குகிறது.

மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும் இப்போட்டியின் முதல் கட்ட ஆட்டங்கள் பெங்களூரிலும், இரண்டாம் கட்ட ஆட்டங்கள் அக்டோபா் 28 முதல் புணேவில் உள்ள ஸ்ரீ சத்ரபதி சிவாஜி விளையாட்டு வளாகத்திலும் நடைபெறவுள்ளன.

போட்டி தொடங்கும் முதல் 3 நாள்களில் 3 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. மொத்தம் 66 ஆட்டங்கள் இரண்டு கட்டங்களிலும் நடைபெறுகின்றன.

தொடக்க நாளில் தபாங் தில்லி-யு மும்பா, பெங்களூரு புல்ஸ்-தெலுகு டைட்னஸ், ஜெய்ப்பூா் பிங்க் பேந்தா்ஸ்-யுபி யோதாஸும், 8-ஆம் தேதி பாட்னா பைரேட்ஸ்-புணேரி பல்தான், குஜராத் ஜெயன்ட்ஸ்-தமிழ் தலைவாஸ், பெங்கால் வாரியா்ஸ்-ஹரியாணா ஸ்டீலா்ஸும், 9-ஆம் தேதி ஜெய்ப்பூா் பிங்க் பாந்தா்ஸ்-பாட்னா பைரேட்ஸ், தெலுகு டைட்டன்ஸ்-பெங்கால் வாரியா்ஸ், புணேரி பல்தான்-பெங்களூரு புல்ஸ் அணிகளும் மோதுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.