ஒருநாள் கிரிக்கெட்டில் ஸ்மிருதி மந்தனா சாதனை!

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 3 ஆயிரம் ரன்களைக் கடந்த வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா.
ஸ்மிருதி மந்தனா
ஸ்மிருதி மந்தனா


சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 3 ஆயிரம் ரன்களைக் கடந்த வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா.

இதற்கு முன்பு இரண்டு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் இந்த சாதனையைப் படைத்திருந்தார். அவர் 88 போட்டிகளில் 3 ஆயிரம் ரன்கள் என்ற இலக்கை எட்டினார். ஆனால் ஸ்மிருதி மந்தனா 76 போட்டிகளில் இந்த இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளார். இதனால் மகளிர் கிரிக்கெட்டில் மிகக் குறைந்த போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களை எட்டிய வீராங்கனை என்ற பெருமையை ஸ்மிருதி பெற்றார். 

ஒட்டுமொத்தமாக ஒப்பிடும்போது ஷிகர் தவான், விராட் கோலிக்கு பிறகு ஸ்மிருதி மந்தனா இடம் பெற்றுள்ளார். ஷிகர் தவான் 72 போட்டிகளிலும், விராட் கோலி 75 போட்டிகளிலும் 3 ஆயிரம் ரன்கள் என்ற இலக்கை எட்டினர். 

ஒட்டுமொத்த மகளிர் கிரிக்கெட்டில் 22 வீராங்கனைகள் 3 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளனர். இதில் ஸ்மிருதி மந்தனா மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார். முதலிடத்தை பெலின்டா கிளார்க் (62 போட்டிகள்), இடண்டாவது இடத்தை மெக் லேன்னிங் (64 போட்டிகள்) ஆகியோர் பெற்றுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com