ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஷர்துல் தாக்குர் அபார பேட்டிங்: முழுமையாக வெற்றியடைந்த இந்திய ஏ அணி!

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக வென்றுள்ளது இந்திய ஏ அணி. 

News image
சஞ்சு சாம்சன் (கோப்புப் படம்)
Updated On :27 செப்டம்பர் 2022, 12:14 pm

DIN

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக வென்றுள்ளது இந்திய ஏ அணி. 

நியூசிலாந்து ஏ அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 நான்கு நாள் ஆட்டங்களிலும் 3 லிஸ்ட் ஏ ஆட்டங்களிலும் விளையாடியது. ஒருநாள் தொடர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. 

3-வது ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய ஏ அணி, 49.3 ஓவர்களில் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் சஞ்சு சாம்சன் 54 ரன்கள், திலக் வர்மா 50 ரன்கள் எடுத்தார்கள். ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்குர் 33 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து அசத்தினார். 

நியூசிலாந்து ஏ அணி, முதல் விக்கெட்டுக்கு 52 ரன்கள் எடுத்தாலும் பிறகு தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்ததால் தடுமாறியது. விக்கெட் கீப்பர் பேட்டர் டேன் கிளெவர் நன்கு விளையாடி 83 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து ஏ அணி 38.3 ஓவர்களில் 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. 19 வயது ஆல்ரவுண்டர் ராஜ் பவா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

3-வது ஒருநாள் ஆட்டத்தை 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய ஏ அணி ஒருநாள் தொடரை 3-0 என வென்றது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.