வங்கதேச கிரிக்கெட் வீரர் மூளைப் புற்றுநோயால் மரணம்

வேறு எந்த வங்கதேச வீரரும் இத்தனை நாள் இடைவெளியில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் இடம்பெற்றதில்லை. 
வங்கதேச கிரிக்கெட் வீரர் மூளைப் புற்றுநோயால் மரணம்

40 வயது வங்கதேச முன்னாள் வீரர் மொஷரஃப் ஹுசைன், மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார்.

2008-ல் வங்கதேச அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார் மொஷரஃப் ஹுசைன். கடைசியாக 2016-ல் விளையாடினார். 5 ஒருநாள் ஆட்டங்களில் பங்கேற்றார். 2008-ல் விளையாடிய பிறகு 8 ஆண்டுகள் கழித்து வங்கதேச அணியில் மீண்டும் இடம்பெற்றார் மொஷரஃப் ஹுசைன். வேறு எந்த வங்கதேச வீரரும் இத்தனை நாள் இடைவெளியில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் இடம்பெற்றதில்லை. 

இடக்கைச் சுழற்பந்துவீச்சாளரான மொஷரஃப் ஹுசைன், 2019-ல் மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு அவர் குணமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகின. எனினும் நவம்பர் 2020-ல் மூளைப் புற்றுநோயால் மீண்டும் பாதிப்புக்கு ஆளானார். இதையடுத்து தற்போது சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.  

மொஷரஃப் ஹுசைனின் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com