பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

வென்றது சென்னை; முடிந்தது மும்பை

மும்பை இண்டியன்ஸூக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ். 

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 4:17 am IST


நவி மும்பை: மும்பை இண்டியன்ஸூக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்.


சென்னைக்கு இது 2-ஆவது வெற்றி; தொடர்ந்து 7 தோல்விகளை சந்தித்து விட்ட மும்பை பிளே ஆஃப் வாய்ப்பை இழக்கும் நிலைக்கு வந்துவிட்டது. 

இந்த ஆட்டத்தில் முதலில் மும்பை 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. அடுத்து சென்னை 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எட்டி வென்றது. 

மும்பையின் டாப் ஆர்டரை முகேஷ் செளதரி சற்று ஆட்டம் காண வைக்க, மிடில் ஆர்டரில் வந்த திலக் வர்மா அணியை சற்று ஸ்திரப்படுத்தினார். சென்னை ஃபீல்டர்கள் தவறவிட்ட 4 கேட்ச்சுகளும் மும்பைக்கு சாதகமானது. பின்னர் சென்னை இன்னிங்ஸில் தொடக்கத்திலேயே 4 விக்கெட்டுகள் சாய்த்து அதிரடி காட்டினார் டேனியல் சாம்ஸ். 

ஆனாலும், இடையில் ராபின் உத்தப்பா, அம்பட்டி ராயுடு சற்று சுதாரித்து ரன்கள் சேர்க்க, இறுதியில் தோனி, பிரெடோரியஸ் கூட்டணி வெற்றிக்கு வழி வகுத்தது. 

முன்னதாக, டாஸ் வென்ற சென்னை பெளலிங்கை தேர்வு செய்தது. மும்பை இன்னிங்ஸில் கேப்டன் ரோஹித் சர்மா, இஷான் கிஷன் டக் அவுட்டாகினர். டெவால்ட் பிரெவிஸூம் 4 ரன்களுக்கு நடையைக் கட்ட, சூர்யகுமார் யாதவ் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 32 ரன்கள் அடித்தார். 

ஹிரித்திக் ஷோகீன் 25, கைரன் பொல்லார்ட் 14, டேனியல் சாம்ஸ் 5 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர். ஓவர்கள் முடிவில் திலக் வர்மா 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 51, ஜெயதேவ் உனத்கட் 19 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை பெளலிங்கில் முகேஷ் செளதரி 3, டுவெய்ன் பிராவோ 2, மிட்செல் சேன்ட்னர், மஹீஷ் தீக்ஷனா ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். 
சென்னை பேட்டிங்கில் ராபின் உத்தப்பா 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 30, அம்பட்டி ராயுடு 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 40 ரன்கள் அடிக்க, ருதுராஜ் டக் அவுட்டானார். மிட்செல் சேன்ட்னர் 11, ஷிவம் துபே 13, கேப்டன் ரவீந்திர ஜடேஜா 3, டுவெய்ன் பிரெடோரியஸ் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 22 ரன்கள் அடித்தனர். 

ஓவர்கள் முடிவில் தோனி 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 28, டுவெய்ன் பிராவோ 1 ரன்னுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை பெளலிங்கில் டேனியல் சாம்ஸ் 4, ஜெயதேவ் உனத்கட் 2, ரைலி மெரிடித் 1 விக்கெட் எடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.