காமன்வெல்த் போட்டிகள்: தங்கம் வென்ற தமிழக வீரர்கள்

காமன்வெல்த் போட்டிகளில் இந்திய ஆடவர் டேபிள் டென்னிஸ் அணி 3-வது முறையாகத் தங்கம் வென்றுள்ளது.
காமன்வெல்த் போட்டிகள்: தங்கம் வென்ற தமிழக வீரர்கள்

காமன்வெல்த் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் விளையாட்டின் இறுதிச்சுற்றில் இந்திய அணி வெற்றி பெற்று தங்கம் வென்றுள்ளது.

2018 கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டிகளில் இந்திய டேபிள் டென்னிஸ் அணி தங்கம் வென்றது. இந்தமுறையும் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. இறுதிச்சுற்றில் சிங்கப்பூரை எதிர்கொண்டது. 

முதல் ஆட்டத்தில் சத்யன் ஞானசேகரன் - ஹர்மீத் தேசாய் ஜோடி வெற்றி பெற்றது. எனினும் 2-வது ஆட்டத்தில் கேப்டன் ஷரத் கமல் தோல்வியடைந்தார். 3-வது ஆட்டத்தில் சத்யன் அபாரமாக விளையாடி வெற்றி பெற்று இந்திய அணிக்கு 2-1 என முன்னிலை அளித்தார். 2019 காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற தேசாய், கடைசி ஆட்டத்தில் எளிதாக வென்று 3-1 என இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். 

காமன்வெல்த் போட்டிகளில் இந்திய ஆடவர் டேபிள் டென்னிஸ் அணி 3-வது முறையாகத் தங்கம் வென்றுள்ளது. 2006-ல் முதல்முறையாகத் தங்கம் வென்றது. இந்திய அணியில் இடம்பெற்ற ஷரத் கமல், சத்யன் குணசேகரன் ஆகிய இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். ஹர்மீத் தேசாய் குஜராத்தைச் சேர்ந்தவர். இதற்குப் பிறகு ஆடவர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆட்டங்களில் இந்திய வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளார்கள்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com