சூர்யகுமார் யாதவ் அபார பேட்டிங்: 3-வது டி20யில் இந்தியா வெற்றி (ஹைலைட்ஸ் விடியோ)

தொடக்க வீரர் சூர்யகுமார் யாதவ் 44 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் எடுத்து...
சூர்யகுமார் யாதவ் அபார பேட்டிங்: 3-வது டி20யில் இந்தியா வெற்றி (ஹைலைட்ஸ் விடியோ)

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தை வென்று டி20 தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி.

பேஸ்டரில் நடைபெற்ற 3-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. மே.இ. தீவுகள் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் 73 ரன்கள் எடுத்தார். புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி, 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்திய கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக 11 ரன்களில் ரிடையர்ட் ஹர்ட் முறையில் ஓய்வறைக்குத் திரும்பினார். தொடக்க வீரர் சூர்யகுமார் யாதவ் 44 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார். ஆட்ட நாயகனாகவும் தேர்வானார். 

இந்த வெற்றியினால் இந்திய அணி டி20 தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது. 4-வது டி20 ஆட்டம் அமெரிக்காவின் லாடர்ஹில் நகரில் ஆகஸ்ட் 6 அன்று நடைபெறவுள்ளது. 

3-வது டி20 ஆட்டத்தின் ஹைலைட்ஸ் விடியோ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com