மதுரை புறப்பட்ட நயினார் நாகேந்திரன் கைது!தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!அருள் விக்னேஷ் மீது புகார் கொடுத்தது முதல்வருக்குத் தெரியுமா? தெரியாதா? மு.க. ஸ்டாலின் கேள்விகார்த்திகை தீபம்! திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தாமிரக் கொப்பரை!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கு! விசாரணை நவ. 27-க்கு ஒத்திவைப்பு!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கு! செய்திகளை வெளியிட நீதிமன்றம் தடை!யாரையும் காப்பாற்ற முயற்சிக்காதீர்! எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கில் நீதிபதி கருத்து!ஆபாச குறுஞ்செய்தி: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ வீட்டிற்கு போலீசார் வருகை!கள்ளக்குறிச்சி ஆட்சியர் புகாரில் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு! காவல்துறை பதில்!மதுரையில் 144 தடை! ஆட்சியர், காவல் துணை ஆணையர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!தங்கம் விலை உயர்ந்தது! இன்றைய நிலவரம் (நவ. 24) பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டு காவலில் வைப்பு!‘கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை கைது செய்க’ - மு.க. ஸ்டாலின்திருவண்ணாமலையில் இன்று மகா தீபம் ஏற்றம்!இன்று டெல்டா உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசபரிமலை பம்பை நதியில் துணிகள், கழிவுகளை வீசினால் ரூ. 5,000 அபராதம்!வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள்: 2.23 லட்சம் விண்ணப்பங்கள் அளிப்பு

ஆசியக் கோப்பை டி20: பாகிஸ்தான் அணி அறிவிப்பு, பிரபல வீரர் நீக்கம்!

ஆசியக் கோப்பை டி20 போட்டியில் விளையாடவுள்ள பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :

ஆசியக் கோப்பை டி20 போட்டியில் விளையாடவுள்ள பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஆசியக் கோப்பைப் போட்டியை 1984 முதல் நடத்தி வருகிறது. 50 ஓவர், டி20 என இரு வகைகளிலும் இப்போட்டி நடைபெறும். இந்திய அணி ஆசியக் கோப்பை ஏழு முறை வென்றுள்ளது. 

2022 ஆசியக் கோப்பைப் போட்டி இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக இலங்கைக்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

ஆசியக் கோப்பை டி20 போட்டிக்கான அட்டவணையை ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் ஜெய் ஷா நேற்று வெளியிட்டார். ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறவுள்ள போட்டியில் ஆகஸ்ட் 28 அன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஆகஸ்ட் 31 அன்று தகுதிச்சுற்றில் இடம்பிடித்த அணியுடன் இந்தியா மோதுகிறது. இந்தியா, பாகிஸ்தான், தகுதிச்சுற்று அணி என மூன்று அணிகள் குரூப் ஏ பிரிவிலும் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் குரூப் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. இரு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றில் மோதவுள்ளன. சூப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள், செப்டம்பர் 11 அன்று துபையில் நடைபெறும் இறுதிச்சுற்றில் மோதுகின்றன. அனைத்து ஆட்டங்களும் இந்திய நேரம் இரவு 7.30 மணிக்குத் தொடங்குகின்றன. 

ஆசியக் கோப்பை டி20 போட்டி மற்றும் நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள பாபர் ஆஸம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளில் இருந்தும் ஹசன் அலி நீக்கப்பட்டுள்ளார். 28 வயது ஹசன் அலி, பாகிஸ்தான் அணிக்காக 21 டெஸ்டுகள், 60 ஒருநாள், 49 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் விளையாடாத நட்சத்திரப் பந்துவீச்சாளர் ஷாஹீன் ஷா அஃப்ரிடி, பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ளார். 

ஆசியக் கோப்பைப் போட்டிக்கான பாகிஸ்தான் அணி

பாபர் ஆஸம் (கேப்டன்), ஷதாப் கான் (துணை கேப்டன்), ஆசிஃப் அலி, ஃபக்கார் ஸமான், ஹைதர் அலி, ஹாரிஸ் ராஃப், இஃப்திகார் அஹமது, குஷ்தில் ஷா, முகமது நவாஸ், முஹமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), முஹமது வாசிம், நசீம் ஷா, ஷாஹீன் ஷா அஃப்ரிடி, ஷாநவாஸ் தஹானி, உஸ்மான் காதிர். 

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.