காமன்வெல்த் போட்டிகள்: அரையிறுதியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

காமன்வெல்த் போட்டிகளில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு நுழைந்துள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

காமன்வெல்த் போட்டிகளில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு நுழைந்துள்ளது.

பிர்மிங்கமில் நடைபெற்ற இந்தியா - பார்படோஸ் அணிகளுக்கு இடையிலான டி20 ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற பார்படோஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய மகளிர் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. ஷஃபாலி வர்மா 43 ரன்களும் ஜெமிமா ரோட்ரிகஸ் ஆட்டமிழக்காமல் 56 ரன்களும் எடுத்தார்கள். பார்படோஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா முதலிடமும் இந்தியா 2-ம் இடமும் பிடித்து அரையிறுதிக்குத் தகுதியடைந்துள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com