செஸ் ஒலிம்பியாட் அரங்கை மீண்டும் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஒலிம்பியாட் ஏற்பாடுகளை அடிக்கடி வந்து பார்வையிடுவது சர்வதேச அளவில் பாராட்டு பெற்றுள்ள இந்தப் போட்டி...
செஸ் ஒலிம்பியாட் அரங்கை மீண்டும் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகின்றன. விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் கடந்த வாரம் நடைபெற்ற விழாவில் செஸ் ஒலிம்பியாட்டை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா்.

மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாடின் 7-வது சுற்றில் இந்திய அணிகள் வழக்கம் போல் தனது வெற்றிப் பயணத்தைத் தொடா்ந்தன. ஓபன் பிரிவில் இந்தியா பி, இந்தியா ஏ அணிகள் 3 மற்றும் 4-வது இடங்களையும் இந்தியா சி அணி 19-வது இடத்தையும் பிடித்துள்ளன. மகளிர் பிரிவில் இந்தியா ஏ அணி முதலிடத்தில் உள்ளது. இந்தியா சி, இந்தியா பி அணிகள் 11 மற்றும் 31-வது இடங்களில் உள்ளன. 

ஏழு சுற்றுகள் முடிவடைந்த நிலையில் சென்னை செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் மாமல்லபுரத்துக்கு வருகை தந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், போட்டிக்கான ஏற்பாடுகளை மீண்டும் பார்வையிட்டார். கடந்த ஞாயிறன்றும் மாமல்லபுரத்துக்கு வருகை தந்து, ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் இடத்தைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின். அப்போது, பிரபல செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்துடனும் அவர் கலந்துரையாடினார். ஒலிம்பியாடில் விளையாடும் பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த 8 வயது வீராங்கனை ராண்டா செடரைப் பாராட்டி விட்டு சென்றார் ஸ்டாலின். 

இந்நிலையில் முதல்வர் செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் அரங்கத்துக்கு வந்து பார்வையிடுவது அவருடைய ஈடுபாட்டை வெளிப்படுத்துவதாக அகில இந்திய செஸ் சம்மேளனத்தின் தலைவர் சஞ்சய் கபூர் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் முதல்வரின் புகைப்படங்களைப் பகிர்ந்து அவர் கூறியதாவது:  முன்னே இருந்து வழிநடத்தும் தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின், சென்னை ஒலிம்பியாட் அரங்கத்துக்கு மீண்டும் வருகை தந்தார். அவருடைய பணிச்சூழலில் ஒலிம்பியாட் ஏற்பாடுகளை அடிக்கடி வந்து பார்வையிடுவது சர்வதேச அளவில் பாராட்டு பெற்றுள்ள இந்தப் போட்டி மீதான அவருடைய ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com