இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

காமன்வெல்த் பாட்மிண்டன்: தங்கம் வென்றார் இந்தியாவின் லக்‌ஷயா சென்

2022 காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா வெல்லும் 20-வது தங்கம் இது.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2022, 11:08 am

DIN

காமன்வெல்த் போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் பாட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் லக்‌ஷயா சென் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

பிர்மிங்கமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் பாட்மிண்டன் இறுதிச்சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென்னும் மலேசியாவின் என்ஜி ஸி யாங்கும் மோதினார்கள். முதல் கேமை மலேசிய வீரர் 21-19 என வென்றார். அடுத்த கேமை 21-9 என வென்ற லக்‌ஷயா சென் கடைசி கேமிலும் ஆதிக்கம் செலுத்தி 19-21, 21-9, 21-16 என இறுதிச்சுற்றை வென்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார். 

மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து தங்கம் வென்ற நிலையில் ஆடவர் பிரிவிலும் இந்திய வீரர் தங்கம் வென்றுள்ளார். 

2022 காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா வெல்லும் 20-வது தங்கம் இது. இதுவரை 20 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் என 57 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 4-ம் இடத்தில் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.