லார்ட்ஸ் ஒருநாள் ஆட்டத்துடன் ஓய்வு பெறவுள்ள ஜுலான் கோஸ்வாமி

ஆறு 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
லார்ட்ஸ் ஒருநாள் ஆட்டத்துடன் ஓய்வு பெறவுள்ள ஜுலான் கோஸ்வாமி

இங்கிலாந்துக்கு எதிரான மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் ஜுலான் கோஸ்வாமி இடம்பெற்றுள்ளார். இங்கிலாந்தில் செப்டம்பர் 18, 21, 24 ஆகிய தேதிகளில் ஒருநாள் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. செப்டம்பர் 10 முதல் 15 வரை 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரிலும் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் செப்டம்பர் 24 அன்று லார்ட்ஸில் நடைபெறும் 3-வது ஒருநாள் ஆட்டத்துடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளார் 39 வயது ஜுலான் கோஸ்வாமி. 

மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக விக்கெட்டுகள் (352) எடுத்த வீராங்கனை என்கிற சாதனையுடன் அவர் விடைபெறுகிறார். கடைசியாக நியூசிலாந்தில் நடைபெற்ற மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் ஜுலான் விளையாடினார். இலங்கையில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் அவர் பங்கேற்கவில்லை.

2002-ல் 19 வயது வீராங்கனையாக சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார் ஜுலான். கடந்த 20 வருடங்களில் 12 டெஸ்டுகள், 201 ஒருநாள், 68 டி20 ஆட்டங்களில் இடம்பெற்றுள்ளார். மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் (252) எடுத்தவர் ஜுலான் தான். ஆறு 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com