பாபர் அசாம் ஒரு மிகச் சிறந்த வீரர்: பாகிஸ்தான் பேட்டிங் பயிற்சியாளர்
By DIN | Published On : 25th August 2022 08:24 PM | Last Updated : 25th August 2022 08:24 PM | அ+அ அ- |

பாபர் அசாம் ஒரு மிகச் சிறந்த வீரர் என பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் முகமது யூசஃப் புகழாரம் சூட்டியுள்ளார்.
பாகிஸ்தானின் அணியின் கேப்டனாகவும், அந்த அணியின் சக வீரராகவும் பாபர் அசாம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பாபர் அசாம் இந்த 2022ஆம் ஆண்டில் சிறப்பான பார்மில் இருந்து வருகிறார். அவர் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்து வருகிறார். இந்த ஆண்டு அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் மொத்தமாக 15 போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். 15 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1,406 ரன்கள் குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 78.11 ஆகும். இந்த ஆண்டு அவர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் 196 ஆகும். இந்த ஆண்டில் பாபர் அசாம் மொத்தமாக 5 சதங்கள் மற்றும் 10 அரைசதங்கள் அடித்துள்ளார்.
இதையும் படிக்க: பல தோற்றங்களில் அசத்தும் விக்ரம்...வெளியானது ‘கோப்ரா’ டிரைலர்
பாபர் அசாம் குறித்துப் பேசிய பாகிஸ்தான் பேட்டிங் பயிற்சியாளர் முகமது யூசஃப் கூறியதாவது: “ கடந்த 2-3 ஆண்டுகளாக பாபர் அசாம் ஒரு சிறந்த வீரர் என்பதை தனது சிறப்பான பேட்டிங் மூலம் நிரூபித்து வருகிறார். அவர் கடினமான சூழலிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் கேப்டானகவும், ஒரு வீரராகவும் தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார்.” என்றார்.