கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடும் ஷுப்மன் கில்

பிரபல கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில், கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுதிட்டுள்ளார்.
கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடும் ஷுப்மன் கில்

பிரபல கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில், கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுதிட்டுள்ளார்.

ஜிம்பாப்வேக்கு எதிரான 3-வது ஆட்டத்தில் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியிருக்கிறது இந்தியா. இந்தியாவின் ஷுப்மன் கில் ஆட்டநாயகன், தொடர்நாயகன் ஆனார். சிறப்பாக விளையாடிய 22 வயது ஷுப்மன் கில், 130 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 97 பந்துகளில் 1 சிக்ஸர், 15 பவுண்டரிகள் அடித்தார். இது அவருடைய முதல் ஒருநாள் சதம். ஜிம்பாப்வே நாட்டில் அதிக ஒருநாள் ரன்களை எடுத்த இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் ஷுப்மன் கில். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், 1998-ல் 127* ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அச்சாதனையை ஷுப்மன் கில் தாண்டியுள்ளார். இதன் காரணமாக ஒருநாள் தரவரிசையில் ஷுப்மன் கில் முன்னேற்றம் அடைந்துள்ளார். சமீபத்திய ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் அவர் 38-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்நிலையில் இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடவுள்ளார் ஷுப்மன் கில். கிளாமர்கன் அணியில் விளையாடுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இந்த வருட இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடவுள்ள 7-வது இந்திய வீரர் ஷுப்மன் கில். புஜாரா, வாஷிங்டன் சுந்தர், கிருனாள் பாண்டியா, சிராஜ், உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி ஆகியோர் கவுன்டி அணிகளில் இடம்பெற்றுள்ளார்கள். ரவி சாஸ்திரி, கங்குலி ஆகியோருக்குப் பிறகு கிளாமர்கன் அணியில் விளையாடு 3-வது இந்திய வீரர், ஷுப்மன் கில். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com