டெஸ்ட் கிரிக்கெட்: வரலாற்று சாதனை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது நாட்டிற்காக சொந்த மண்ணில் 100 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.  
டெஸ்ட் கிரிக்கெட்: வரலாற்று சாதனை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது நாட்டிற்காக சொந்த மண்ணில் 100 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார். 

கிரிக்கெட் வீரர் ஒருவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக தனது சொந்த மண்ணில் 100 போட்டிகளில் விளையாடியுள்ளது இதுவே முதல் முறையாகும். 

இந்த சாதனையை மான்செஸ்டரில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியின்போது நிகழ்த்தினார் ஆண்டர்சன்.

தனது 19 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் ஆண்டர்சன் இந்த சாதனையைப் படைத்துள்ளார். இந்த சாதனையைப் படைத்துள்ள ஒரே வீரர் என்ற பெருமையினையும் அவர் பெற்றுள்ளார். ஆண்டர்சன் மொத்தமாக இதுவரை 172 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 100 போட்டிகள் அவரது சொந்த மண்ணான இங்கிலாந்தில் விளையாடியுள்ளார். 

இதற்கு முன்னதாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சொந்த மண்ணில் அதிக போட்டியில் விளையாடிவர் என்ற பட்டியலில் முன்னிலையில் இருந்தார். சச்சின் டெண்டுல்கர் தனது 23 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சொந்த மண்ணில் 94 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவரைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தனது 17 ஆண்டுகால டெஸ்ட் பயணத்தில் சொந்த மண்ணில் 92 போட்டிகளில் விளையாடியுள்ளார். இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட் 14 ஆண்டுகளில் சொந்த மண்ணில் 91 போட்டிகளிலும், அலஸ்டர் குக் 12 ஆண்டுகளில் சொந்த மண்ணில் 89 போட்டிகளிலும் விளையாடி அடுத்தடுத்து இடங்களில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com